Enable Javscript for better performance
அதிமுக சார்பில் 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக சார்பில் 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 08th April 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் நகரில் அதிமுக நகரக் கிளை சார்பில் இரண்டாம் கட்டமாக 6 இடங்களில் கோடைகாலத் தண்ணீர் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

    ஏற்கெனவே அதிமுக நகரக் கிளை சார்பில், முதல் கட்டமாக ஒரு வாரத்துக்கு முன்பு 9 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை புதிய பேருந்து நிலையம், விளார் சாலை, விளார் ஊராட்சி, பாத்திமா நகர், தெற்கு வீதி உள்பட 6 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.

    இவற்றில் பொதுமக்களுக்கு நீர் மோர், பானகம், நுங்கு, இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    இவற்றை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.

    சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், அதிமுக நகரச் செயலர் வி. பண்டரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai