அரசு மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
By கும்பகோணம் | Published on : 08th April 2013 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் "புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியம் மற்றும் சமுதாய கலாசார வெளிப்பாடுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். ஆங்கிலத் துறைத் தலைவர் வெங்கடகலையரசி வரவேற்றார்.
கருத்தரங்கில் விலங்கியல் துறைத் தலைவர் சுமந்திதேவி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் ஹேமலதா உரையாற்றினர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியை கலாமணி சிறப்புரையாற்றினார்.