Enable Javscript for better performance
என்எஸ்எஸ் முகாம்கள்  நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாளையம், பாளமுத்தி ஆகிய இரு இடங்களில் நடத்திய நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்கள் அண்மையில் நிறைவடைந்தன.

    வலிமையான இளைஞர்கள்- வளமான பாரதம் என்ற தலைப்பில் 7 நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் 98 மாணவர்கள் பங்கேற்று சாலை சீரமைப்பு, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை சரி செய்தல்,கோவில், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். தினமும் மாலையில் யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடைபெற்றன. 

    முகாமை கல்லூரி முதல்வர் வீ. முத்துவேலு தொடக்கி வைத்தார். துணை முதல்வர் பி.டி. மதியழகன், ஊராட்சித் தலைவர் கை. சேகர், திட்ட அலுவலர்கள் ஏ. முகமது அலி, எஸ். அருள் நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai