Enable Javscript for better performance
ஏப். 15-ல் தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 15-ல் தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சி தொடக்கம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 08th April 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தங்கத்தின் தரம் கண்டறிதல் குறித்த கோடைகாலப் பயிற்சி முகாம் ஏப். 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    இதுகுறித்து நிலைய முதல்வர் ஜயபால் தெரிவித்திருப்பது:

    நகைக் கடைகளிலும், அடகு கடைகளிலும், வங்கிகளிலும் நகைகளின் புழக்கம் அதிகமாகியுள்ளது.

    தங்கத்தை மதிப்பீடு செய்து அதன் தரத்தைக் கண்டறிவது அவசியம்.

    தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஏப். 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    இந்த முகாமில் 40 மணி நேரம் வகுப்பறைப் பயிற்சியும், தலா 30 மணிநேரம் நகை செய்முறைப் பயிற்சியும், உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சியும் என மொத்தம் 100 மணிநேரம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    மொத்தம் 20 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் அளிக்கப்படும்.

    பயிற்சி பெற்றவர்கள் தேசிய, வணிக, கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பு பெறலாம். தவிர, அடகுக் கடை, ஆபரணக்கடை, நகை வணிகம் செய்யவும் நல்ல வாய்ப்புள்ளது.

    மேலும், விவரங்களுக்கு 04362- 238253, 9942966597 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai