Enable Javscript for better performance
கண்டன பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் தேமுதிக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    தேமுதிகவினர் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்தக் கோரியும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீராதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் மணல் குவாரிகளை மூடக்கோரியும், நடைபெற்ற கூட்டத்துக்கு பாபநாசம் ஒன்றியச் செயலர் கு. மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார்.

    தலைமை நிலைய செயலர் ப. பார்த்தசாரதி, மாவட்டச் செயலர் சி. சாமிநாதன், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் எஸ். மாதவன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் எஸ். அறிவழகன், ஒன்றிய அவைத் தலைவர் என். மாதவன், ஒன்றியப் பொருளாளர் கோ. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai