Enable Javscript for better performance
கழிவறை கணக்கெடுப்புப் பணி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்தில் கழிவறை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஒரத்தநாடு ஒன்றியத்தில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், ஒன்றியத்தில் உள்ள குடியிருப்புகளில் கழிவறை குறித்த கணக்கெடுப்புக்காக கடந்த 19 ஆம் தேதி ஊராட்சித் தலைவர்கள், செயலர்களுக்கு கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுவரை 30 ஊராட்சிகளில் கணக்கெடுப்புப் பணி முடிவுபெற்றது. கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சியில் சனிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீதமுள்ள 28 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு பணி வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியநாயகி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai