Enable Javscript for better performance
கூட்டுறவு சங்க செயலர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

     தஞ்சாவூரில் கூட்டுறவு சங்கச் செயலர் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை கூட்டுறவு ஊழியர் சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் செயலராகப் பணியாற்றி வருபவர் கு. இளங்கோவன் (57). இவர் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கூட்டுறவு தேர்தலுக்காக தஞ்சாவூர், சீனிவாசபுரத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கூட்டுறவு நாணய சங்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், இளங்கோவன் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தென்னந்தோப்பில் சனிக்கிழமை பிற்பகல் விஷம் குடித்தாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தாங்கள் கூறும் நபர் அளிக்கும் வேட்பு மனுவை மட்டுமே ஏற்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த இரு பிரமுகர்கள் தனித்தனியாக வற்புறுத்தி வந்தனராம். அதை மீறி மனுக்களை வாங்கினால் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியப் பலன்களைக் கிடைக்க விடமாட்டோம் என மிரட்டினராம். இதனால் இளங்கோவன் தற்கொலைக்கு முயன்றதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai