Enable Javscript for better performance
துகிலியில் ராதா மகோத்சவம்- Dinamani

சுடச்சுட

    

     கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் 15ஆம் ஆண்டு ராதா மாதவ மகோத்சவம் 2 நாள்கள் நடைபெற்றது.

    இந்த மகோத்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை 7 பேருக்கு தம்பதி பூஜை நடைபெற்றது. அதையடுத்து  இயற்கை வளம் வேண்டி அஷ்டபதி பஜனையுடன் தொடங்கி பாடல்கள் பாடப்பட்டன.  இரவு திவ்யநாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு விநாயகர், முருகன், சிவன், கிருஷ்ணர், ராதை, துர்கை, பாண்டுரெங்கன், ரகுமாயி, ஆதிசங்கரர் போன்ற தெய்வீக அலங்காரம் செய்யப்பட்டு கீர்த்தனைகள் பாடப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை  2 வது நாளாக வீதி பஜனையாக சென்று உஞ்சவிருத்தி, நாம சங்கீர்த்தனைகளை பஜனை சம்பிரதாயத்தின்படி ராதா மாதவ திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழுப்புரம் ஜெயதீர்த்தன் பாகவதர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாடினர். ஏற்பாடுகளை காமாட்சி அம்மாள் அறக்கட்டளை, ஆதிசங்கரர் நற்பணி மன்றத்தினர், தாம்பிராஸ் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai