Enable Javscript for better performance
பெருவுடையார் கோவிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெருவுடையார் கோவிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

    By தஞ்சாவூர்  |   Published on : 08th April 2013 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவிலில் சித்திரைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருக்கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை விழாக் கொடி ராஜ வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    பின்னர் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சு. ஞானசேகரன், சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலையில் விநாயகர், சந்திரசேகர் உள்பட பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் வீதி உலா சென்ற காட்சி நடைபெற்றது.

    தொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் நாள்தோறும் காலையில் பல்லக்கு, மாலையில் சந்தனக்காப்பு அலங்காரம், வாகனப் புறப்பாடும் நடைபெறவுள்ளது.

    இதனிடையே, ஏப்ரல் 15 ஆம் தேதி ஸ்ரீ தியாகராஜ சுவாமி பிரகாரத்தில் வலம் வந்து வசந்த மண்டபத்தில் பிரவேசம், 16 ஆம் தேதி காலை ஸ்ரீ தியாகராஜர் யதாஸ்தான பிரவேசம், 21 ஆம் தேதி ரத உத்சவம், 23 ஆம் தேதி ஸ்ரீ தியாகராஜர் பக்தர் காட்சியுடன் யதாஸ்தான பிரவேசம், 24 ஆம் தேதி மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ஆகியவை நடைபெறவுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai