Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு

    By தஞ்சாவூர்,  |   Published on : 08th April 2013 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வர்ணம் பூசும் தொழிலாளி உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் (28) வர்ணம் பூசம் தொழிலாளி. இவர் தனது நண்பர் மகேசுடன் வல்லத்திலிருந்து தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    இதனிடையே, தஞ்சை - திருச்சி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு மீண்டும் தஞ்சை நோக்கி சாலையில் எதிர் திசையில் வந்தாராம். அப்போது, இவர்கள் மீது மயிலாடுதுறையிலிருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மோதியது. இந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது.

    இதில், பலத்தக் காயமடைந்த சிங்கராஜ் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், மகேஷ், மயிலாடுதுறை - திருச்சி காரில் பயணம் செய்த மயிலாடுதுறையைச் சேர்ந்த வெங்கடேஷ், அவரது மனைவி லீலா (32), குழந்தை மீரா, லீலாவின் தாய் ரமா (60), மற்றொரு காரில் வந்த கோபிசெட்டிபாளையம் ராஜகோபால், திருச்சி பாலாஜி ஆகியோர் காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai