Enable Javscript for better performance
வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூரில் இச் சங்கத்தின் மாவட்ட மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டை சங்கத்தின் மாநிலத் தலைவர் என். முத்துக்கண்ணன் தொடக்கி வைத்தார்.

    இதில் செங்கிப்பட்டியில் இயங்கும் காசநோய் மருத்துவமனையை மேம்படுத்தி கூடுதலாக மருத்துவர்களையும், ஊழியர்களையும் நியமித்து 24 மணிநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை - அரியலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக வி. கரிகாலன், துணைத் தலைவராக என். அறிவழகன், செயலராக ஆர். மணிமாறன், துணைச் செயலராக க. அருளரசன், பொருளாளராக கே. செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 19 பேர் கொண்ட மாவட்டக் குழுத் தேர்வு செய்யப்பட்டது. இவர்களை மாநிலச் செயலர் ஆர். வேல்முருகன் அறிமுகப்படுத்தினார்.மாநிலப் பொருளாளர் எஸ். பாலா, மாவட்ட முன்னாள் தலைவர் டி. செல்வமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai