Enable Javscript for better performance
150 குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150

    குருதி கொடையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி சார்பிலும் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    இதில், மாவட்டத்தில் உள்ள 150 குருதி கொடையாளர்களைப் பாராட்டி, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தா.ச. அன்பு, மருத்துவக் கல்லூரி முதன்மையர் கே. மகாதேவன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மீனாட்சி, குழந்தைகள் நல மருத்துவ அலுவலர் எம். சிங்காரவேல், ரத்த வங்கி அலுவலர் ராதிகா மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai