Enable Javscript for better performance
50 } ஆம் ஆண்டு வருடாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் 50ஆம் ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை(ஏப்.7)  நடைபெற்றது.

    இக்கோவில் புதிதாக கட்டப்பட்டு 7.4.1963-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு  50 ஆம் ஆண்டு பொன் விழா கும்பாபிஷேக நினைவாக சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். ஏற்பாடுகளை சித்தி விநாயகர் நித்ய பூஜா அறக்கட்டளை  மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai