Enable Javscript for better performance
9,586 ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,586 ஏழைப் பெண்களுக்கு ரூ. 35.50 கோடி மதிப்பில் திருமண நிதியுதவித் தொகை, திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் குறிப்பிடப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

    இதில், மாவட்டத்தைச் சார்ந்த 526 ஏழைப் பெண்களுக்கு ரூ. 1.99 கோடி மதிப்பில்  திருமாங்கல்யத்துக்கு தங்கத்தையும், திருமண நிதியுதவியையும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் வழங்கினார்.

    இந்த விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் பேசியது:

    இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 9,586 ஏழைப் பெண்களுக்கு ரூ. 35.50 கோடி மதிப்பில் திருமண நிதியுதவித் தொகையும், திருமாங்கல்யத்துக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி (திருவையாறு), இரா. துரைக்கண்ணு (பாபநாசம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai