Enable Javscript for better performance
அதிராம்பட்டினத்தில் மறியல்- Dinamani

சுடச்சுட

    

     தேங்கிக் கிடக்கும் சாக்கடையை சீரமைக்கக் கோரி அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அதிராம்பட்டினம் தரகர் தெருவில் மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தரகர் தெருவாசிகள் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை நீரை உடனடியாக அகற்றி, சுத்தம் செய்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி திங்கள்கிழமை இங்குள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வணிகர் ராஜிக் அகமது, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

    தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் பேச்சு நடத்தி, பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ஒரு வாரத்தில் தேங்கிய சாக்கடை நீர் அகற்றித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai