Enable Javscript for better performance
ஒரத்தநாடு கல்லூரிக்கு எம்.பி. நிதியில் ரூ. 3.25 கோடி- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாடு கல்லூரிக்கு எம்.பி. நிதியில் ரூ. 3.25 கோடி

    By தஞ்சாவூர்,  |   Published on : 09th April 2013 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு மக்களவைத் தொகுதி (எம்.பி.) மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:

    கடந்த 2006-ல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் 29 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் 5 முதுநிலைப் பட்டப்படிப்புகள், 13 இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இடப் பற்றாக்குறை காரணமாக ஷிப்ட் 1, ஷிப்ட் 2 என இரு பிரிவுகளாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்தக் கல்லூரிக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மேலும் 32 வகுப்பறைகள் கட்டலாம். இதனால் அனைத்து வகுப்புகளையும் ஒரே நேரத்திலேயே நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai