Enable Javscript for better performance
கூட்டுறவு தேர்தல் வேட்புமனுவை வாங்க மறுத்ததாகப் புகார்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு தேர்தல் வேட்புமனுவை வாங்க மறுத்ததாகப் புகார்

    By தஞ்சாவூர்  |   Published on : 09th April 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஞ்சாவூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்பு மனுவை வாங்க மறுத்ததாக மாவட்ட ஆட்சியரகத்தில் பெண்கள் திங்கள்கிழமை புகார் செய்தனர்.

    மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் நாஞ்சிக்கோட்டை சாலை குந்தவை நாச்சியார் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அளித்த மனு:

    இந்தச் சங்கத்தில் 2,000-க்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கத்தில் ஏப். 12-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தேதி ஏப். 4 என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது எங்களை அலுவலர்கள் உள்ளே விட மறுத்துவிட்டனர்.

    மேலும், சங்கத்தில் புதிதாக சேர்ந்துள்ள 4 பேரை மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

    நீண்டகாலமாக உறுப்பினர்களாக இருந்து வரும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம். வெளியில் காத்திருந்த எங்களை மீண்டும் மாலையில் வருமாறு அழைத்தனர். ஆனால், யாரும் வாக்குப் பதிவு செய்யாமலேயே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    கட்சிக்காரர்கள், போலீஸார், அலுவலர்கள் உதவியுடன் இந்த முறைகேடு நடந்தது. எனவே, இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai