Enable Javscript for better performance
தஞ்சை சரக புதிய டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை சரக புதிய காவல் துணைத் தலைவராக (டி.ஐ.ஜி.) வி.எச். முகமதுஹனீபா திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

    இவர் இதற்கு முன் நாகை கடலோரப் பாதுகாப்புப் படை காவல் கண்காணிப்பாளராக இருந்து, பதவி உயர்வில் மூலம் திங்கள்கிழமை தஞ்சை சரக (தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) காவல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். இதுகுறித்து   அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

    சாலை விபத்துகளைக் குறைக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், அமல்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை. இந்தப் பணியை மேற்கொண்டால் விபத்துகள் குறையும்.மற்ற பிரச்னைகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுவாகக் காவல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்த கவனம் செலுத்தப்படும் என்றார் முகமது ஹனீபா. இவருக்கு முன்பு தஞ்சை சரக காவல் துணைத் தலைவராக இருந்த எச்.எம். ஜயராம் தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கு மாற்றப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai