Enable Javscript for better performance
பாபநாசம் பகுதிகளில் அதிமுக தண்ணீர்ப் பந்தல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூராó மாவட்டம்,பாபநாசம் ஒன்றியப் பகுதிகளில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    பாபநாசம் எம்எல்ஏ இரா. துரைக்கண்ணு தலைமை வகித்தார். பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் கே. கோபிநாதன், துணைத் தலைவர் டி. ஆனந்தி, தொகுதிச் செயலர் எம். கருணாநிதி,அய்யம்பேட்டை பேரூராட்சித் தலைவர் கோ.வி. கோவிந்தராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சாவூர் எம்எல்ஏ எம். ரெங்கசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அய்யம்பேட்டை பேருந்து நிலையம், கோவிலடி பேருந்து நிறுத்தம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம்,பாபநாசம் கடைவீதி, பாபநாசம் பழைய அண்ணாசிலை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர்ப் பந்தலை திறந்து வைத்தார். பாபநாசம் நகரச் செயலர் வி. நாகைய்யன்,அய்யம்பேட்டை நகரச் செயலர் முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. பன்னீர்செல்வம்,நா. மகேந்திரன்,ஒன்றியக் குழு உறுப்பினர் ஜாபர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். மோகன்,அதிமுக நிர்வாகிகள் பழனிசாமி,சி. முத்து, ராஜகோபால்,எஸ்.என். சேகர்,சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai