Enable Javscript for better performance
பேராவூரணியில் அரசுக் கல்லூரி:பொதுமக்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணியில் அரசுக் கல்லூரி:பொதுமக்கள் மகிழ்ச்சி

    By பேராவூரணி,  |   Published on : 09th April 2013 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    பேராவூரணி பகுதியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி இல்லாததால் உயர்கல்வி பெற சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று பேராவூரணியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி நிகழாண்டிலேயே அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிமுகவினர் பட்டாசு வெடித்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தொகுதித் தலைவர் எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி கூறியது: இந்தக் கோரிக்கை குறித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில்  முதல்வருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டு, அதுகுறித்து தினமணியிலும் செய்தி வெளியாகியிருந்தது.   கல்லூரி அமைக்க உத்தரவிட்ட  முதல்வருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai