Enable Javscript for better performance
மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உண்ணாவிரதம்

    By தஞ்சாவூர்  |   Published on : 09th April 2013 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் அருகேயுள்ள சூரக்கோட்டையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காகப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    அப்போது மாரிமுத்துவின் மனைவி அபிராமிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் 8 மாதங்களுக்கு முன் அளித்த தீர்ப்புப்படி அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் நடைபெற்ற போராட்டத்துக்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி. சுகந்தி தெரிவித்தது:

    கெüரவ கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய சிலர் முயல்கின்றனர். கெüரவ கொலைகளைத் தடுக்க அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

    பிளஸ் 2 படித்துள்ள அபிராமியின் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

    அவருக்கு அரசு வேலை, நிவாரணம் வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காகவே இந்தப் போராட்டம். இதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தகட்டப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றார் சுகந்தி.

    பாதிக்கப்பட்ட அபிராமி தெரிவித்தது:

    எனது கணவர் மாரிமுத்துவை காதலித்து திருமணம் செய்ததற்காக அவரை அழைத்துச் சென்று கொலை செய்தனர். அவரை எப்படி, யார் கொன்றனர் என்ற தகவல்கூட வெளியிடப்படவில்லை.

    அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வேலையும், உதவியும் கிடைக்கவில்லை. எனது கணவர் இல்லாததால் சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப்படுகிறோம். எனவே, எனக்கு வேலையும், வீடும் அவசியம் தேவை என்றார் அபிராமி.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி, துணைத் தலைவர் எம். மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai