Enable Javscript for better performance
ரெகுநாதபுரத்தில் விலையில்லாப் பொருட்கள்- Dinamani

சுடச்சுட

    

     தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் ஒன்றியம், ரெகுநாதபுரம் ஊராட்சியில் 534 பேருக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருட்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    சிறப்புத் திட்டச் செயலாக்கத் தனித் துணை ஆட்சியர் பி. குணசேகரன் தலைமை வகித்தார். பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் கே. கோபிநாதன், துணைத் தலைவர் டி. ஆனந்தி,மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. பன்னீர்செல்வம், நா. மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சாவூர் எம்எல்ஏ எம். ரெங்கசாமி,பாபநாசம் எம்எல்ஏ இரா. துரைக்கண்ணு உள்ளிட்டோர்  விலையில்லாப் பொருள்களை வழங்கிப் பேசினர். தொகுதிச் செயலர் எம். கருணாநிதி,வட்டாட்சியர் வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,தனித் துணை வட்டாட்சியர் பாலேந்திரன்,தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ். மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். உதவியாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai