Enable Javscript for better performance
விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு

    By தஞ்சாவூர்,  |   Published on : 09th April 2013 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில் இரு கால்களை இழந்த பெண்ணுக்கு சுமார் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டனின் மனைவி வெற்றிச்செல்வி (26). மன்னார்குடி அருகேயுள்ள எடமேலையூரில் 2012 ஆம் ஆண்டு ஆக. 19-ல் நின்று கொண்டிருந்த இவர் மீது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியது.

    இதில், பலத்த காயமடைந்த வெற்றிச்செல்வி இரு கால்களையும் இழந்தார். இதுதொடர்பாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிச்செல்வி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முகமதுஅலி பாதிக்கப்பட்ட வெற்றிச்செல்விக்கு ரூ. 20,30,000 இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்துக்கு உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai