Enable Javscript for better performance
\\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி ஒன்றியம் ஆவணம், ஆதனூர் ஊராட்சிகளில் "அம்மா' திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    ஆவணம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டாட்சியர் செ. சிதம்பரம் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 113 மனுக்கள் பெறப்பட்டு 7 பேருக்கு பட்டா மாறுதல், 3 பேருக்கு சாதிச் சான்றிதழ், 3 பேருக்கு இருப்பிடச் சான்றிதழ், ஒருவருக்கு வருமானச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முகாமில் ஊராட்சி உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன், ராமநாதன், வருவாய் ஆய்வாளர் ஞானமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆதனூரில் நடைபெற்ற முகாமிற்கு நலிந்தோர் நலத் திட்ட வட்டாட்சியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் அசோக்குமார், பேரூராட்சி உறுப்பினர் என். ஆனந்தன் முன்னிலை வகித்தனர். முகாமில் 177 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai