Enable Javscript for better performance
எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை பாதுகாப்பாக அனுப்ப ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை பாதுகாப்பாக அனுப்ப ஆலோசனை

    By : தஞ்சாவூர்  |   Published on : 10th April 2013 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள்களை உரிய பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பிவைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் பேசியது:

    தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகள் உரிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்ப வேண்டும். இதேபோல, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குப் பிற மாவட்டங்களிலிருந்து வரும் விடைத்தாள்களைப் பாதுகாப்பாக எடுத்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்தப் பணியில் கல்வித் துறையும், அஞ்சல் துறையும் ஒருங்கிணைந்து கவனமாகச் செயல்பட வேண்டும் என்றார் பாஸ்கரன்.

    முதன்மைக் கல்வி அலுவலர் சு. மதி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் சுவர்ணலதா, நாகராஜன், நரேந்திரன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai