Enable Javscript for better performance
ஏப். 13-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப். 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கு. கலைச்செல்வன் தெரிவித்திருப்பது:

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு மையம் செயல்படுகிறது.

    இந்த மையமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏப். 13-ம் தேதி காலை 10 மணிக்கு நடத்தவுள்ளன. இந்த முகாமில் 10-க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

    இந்த முகாமில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டதாரிகள், ஓட்டுநர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai