Enable Javscript for better performance
குடிமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிமனை மற்றும் குடிமனை பட்டா வழங்கக் கோரி, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் குடிமனை இல்லாத அனைவருக்கும் பட்டாவுடன்

    குடிமனை வழங்க வேண்டும். குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் வகை மாற்றம் செய்து, குடிமனை பட்டா வழங்க வேண்டும்.

    ஆட்சேபகரமான இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டாவுடன் மாற்று இடம் வழங்க வேண்டும். 31.3.2013 அன்று முடிவடைந்த குடிமனை பட்டா வழங்கும் அரசு ஆணையை நிரந்தரமாக்க ஆணையிட வேண்டும். 60 வயதைக் கடந்த விவசாயத் தொழிலாளர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அரசே சீரமைக்க வேண்டும். கோவில் மனைகளில் குடியிருப்போருக்குத் தமிழக அரசே பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    சங்கத்தின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலர் கே. மருதமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். வாசு, ஒன்றியச் செயலர்கள் என்.வி. கண்ணன், ஏ. கருப்புசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம். அபிமன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் பி. செந்தில்குமார், நகரக் குழு உறுப்பினர் கே. அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai