Enable Javscript for better performance
சாஸ்த்ரா பல்கலை.யில் கலை விழா போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் குருக்சாஸ்த்ரா என்கிற 4 நாள் கலை விழாப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

    இந்த விழாவில் 30-க்கும் அதிகமான கல்லூரிகளிலிருந்து ஏறத்தாழ 2,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். புகழ் பெற்ற கலைஞர்களான இசை இயக்குநர் தேவன், பின்னணிப் பாடகர் ஆலப் ராஜு, கடம் சுரேஷ், வயலின் கலைஞர் பால பாஸ்கர் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.இதில், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.) ஒட்டுமொத்த கேடயத்தை வென்றது.இதுகுறித்து மாணவர் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தது: நிகழாண்டு குருக்சாஸ்த்ரா கலை விழாவில் பிற கல்வி நிலையங்களிலிருந்து கலந்து கொண்டோரின் ஈடுபாடு, துறையில் வல்லமை படைத்த கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவை சிறப்பாக இருந்தது என்றார் .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai