Enable Javscript for better performance
தஞ்சாவூரில் பெண் மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் கரந்தையில் பெண் மர்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

    தஞ்சாவூர் கரந்தை ஜெயின் மூப்பத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமாரின் மனைவி உமா மகேஸ்வரி (22). இவர் திங்கள்கிழமை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    முத்துக்குமாருக்கும், உமா மகேஸ்வரிக்கும் இடையே 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், உமா மகேஸ்வரியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் காளியம்மாள் மேற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai