Enable Javscript for better performance
மனுக்கள் பெற அலுவலர்கள்இல்லாததால் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு ஊழியர், கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெற நியமிக்கப்பட்ட அலுவலர் இல்லாததால், உறுப்பினர்கள் அலுவலகத்திற்குள் உட்கார்ந்து செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம் பக்தபுரி தெருவில் இச்சங்க அலுவலகம் உள்ளது. இதில் நிர்வாகக் குழு தேர்தல் நடத்துவதற்கென செவ்வாய்க்கிழமை மனு பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி உறுப்பினர்களான ஊழியர்கள் பலர் அலுவலகம் சென்றனர். ஆனால், மாலை 4 மணி வரை தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த சார் பதிவாளர் திருநாவுக்கரசு வரவில்லையாம். இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் தரையில் உட்கார்ந்தும், வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கூட்டுறவு ஊழியர் சிஐடியு தொழிற்சங்க தஞ்சை மாவட்ட செயலர் ராஜாராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட செயலர் செல்வகுமார், தஞ்சை மாவட்ட தலைவர் சேகர், துணை செயலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai