Enable Javscript for better performance
மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இங்குள்ள வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் நா. காளிதாஸ் தலைமை வகித்தார். கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் அரசு விதிகளுக்கு

    புறம்பாக இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி, ரூ. 60 லட்சம் மதிப்புள்ள மீன்களைப் பிடித்த விசைப் படகை பறிமுதல் செய்ய வேண்டும். கடலில் இருந்து கடல்பாசி, மீன் முட்டைகள், மீன் குஞ்சுகள் ஆகியவற்றை கரைக்கு எடுத்து வருவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் எச். ரஹமத்துல்லா கானிடம் கோரிக்கை மனுவை மீனவர்கள் அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai