Enable Javscript for better performance
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

    By தஞ்சாவூர்  |   Published on : 10th April 2013 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்குவதற்கு உரிய அரசாணையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்குத் தமிழ்நாடு மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமான

    கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த அமைப்பின் சார்பில் வாயிற் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குத் தாள் ஒன்றுக்கு ரூ. 15 வீதம் வழங்க வேண்டும். மாணவர்கள் நலன் கருதி விடைத்தாள் திருத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு வழங்கப்படும் விடைத்தாள்களின் எண்ணிக்கையை 12-லிருந்து 8 ஆகக் குறைக்க வேண்டும்.

    பிளஸ் 2 உயிரியல் விடைத்தாளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் 40-லிருந்து 30 ஆகக் குறைக்க வேண்டும்.

    பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கற்பித்தல் பணி மேற்கொள்ளும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது மிகவும் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நிலையில் உள்ளனர். எனவே, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க உரிய அரசாணையைத் தமிழக அரசும், கல்வித் துறையும் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்டத் தலைவர் கோ. அறிவழகன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆ. ரமேஷ், பொருளாளர் ஆ. பிரபாகரன், பிரசார செயலர் வெ. ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai