Enable Javscript for better performance
வழிப்பறிச் சம்பவங்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வழிப்பறிச் சம்பவங்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

    By தஞ்சாவூர்  |   Published on : 10th April 2013 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சையில் நிகழும் நகை பறிப்பு, வழிப்பறிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூரில் இந்த அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரவையின் தலைவர் அர. தங்கராசன் தலைமை வகித்தார்.

    தஞ்சை நகரப் பகுதி மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் பெண்களைத் தாக்கி நகைகளை பறித்தல், வழிப்பறிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மருத்துவக் கல்லூரி சாலைப் பகுதியில் அதிக அளவில் நிகழ்கின்றன. இதனால், பெண்கள் நடமாடுவதற்கே பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, தஞ்சை மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் கோ. ராசேந்திரன், பேரவையின் இணைச் செயலர் க. கோவிந்தராசன், துணைத் தலைவர் இரா. சாவித்திரி தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai