Enable Javscript for better performance
211 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    211 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்

    By திருக்காட்டுப்பள்ளி,  |   Published on : 10th April 2013 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூதலூர் ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் 211 குடும்பங்களுக்கு விலையில்லாப் பொருள்களை அண்மையில் வழங்கப்பட்டன.

    புதுப்பட்டியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழாவுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெத்தினசாமி, தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசமி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன், பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை திருஞானசம்பந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ். ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், 211 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்கினார்.

    விழாவில் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் துணை ஆட்சியர் குணசேகரன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. வெங்கடேசன், திருக்காட்டுப்பள்ளி நகர அதிமுக செயலர் எம்.பி.எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஜெ. பேரவையின் துணைச் செயலர் சிவ. திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai