தஞ்சாவூரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
Published on : 11th April 2013 02:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தஞ்சை மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
ஊதிய குறை தீர்க்கும் குழுவின் அறிக்கையை வெளியிட்டு, சங்கங்களை அழைத்துப் பேசி அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபால்சாமி தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் மனோகரன் தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் விளக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநிலச் செயலர் சிவகுரு, பொது காப்பீட்டு ஊழியர் சங்க மண்டலத் துணைத் தலைவர் சத்தியநாதன், வணிக வரி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.