Enable Javscript for better performance
\\\'மரபுசார் மருத்துவத்தை பயிற்சி மூலம் அறியலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    மரபுசார் மருத்துவத்தைப் பயிற்சி மூலம் கற்று அறியலாம் என்றார் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக ஆய்வு மற்றும் பயிற்சி மையப் பேராசிரியர் ந. புண்ணியமு்ர்த்தி.
     தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற அன்னபூரணி ராமநாதன் நினைவு அறிவியல் தமிழ் அறக்கட்டளை, முனைவர் சி. ஏசுதாசன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் மரபுசார் மூலிகை மருத்துவம் என்ற தலைப்பில் பேசியது:
     'மருத்துவம் என்பது மொழி, இனம் சார்ந்து அமைவதில்லை; அதிகாரம் சார்ந்து அமைகிறது. முன்னோர்கள் பல ஆண்டுகளாகக் கண்டறிந்த மருத்துவமே மரபுசார் மருத்துவம். வாய் மொழியாகப் பரவி வந்த இந்த மருத்துவம் இப்போது ஆராய்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
     முதலுதவிக்கென்று உருவான மருத்துவம் கால்நடை மருத்துவமாக மாறியது. மடி வீக்க நோய்க்கு மருந்து கொடுத்தால் 28 நாள்களுக்குப் பாதிப்புக்குள்ளான பசுவிடம் பால் கறக்கக் கூடாது. ஏனெனில், அந்தப் பாலில் மருந்துப் பொருளின் எச்சம் இருக்கும்.
     உணவு சார்ந்த நோய்களைச் கட்டுப்படுத்துவதற்குக் கம்பங் கூழ் பயன்படும். உடல் நலமாக இருக்க வேண்டுமானால் வெள்ளைச் சர்க்கரை, அரிசி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, டால்டா, பேக்கரி பொருள்கள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. விரலால் காலையும், மாலையும் 2 நிமிஷங்களுக்கு பல் துலக்கினால் பல்நோய் வராது. 25 தாவரப் பொருள்களில் பல் துலக்கலாம். நுண்ணுயிர்களைக் கொல்லும் திறன் உப்புக்கு உண்டு.
     காது குடைவதற்கு ஏற்ற சுண்டுவிரல் ஆபத்து இல்லாதது. காதைப் பாதுகாத்தால் சளி பிடிக்காது. குளிர் காலத்தில் பஞ்சு வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை. மிளகு, உப்பு அரைத்து கண்ணில் பிழிந்துவிட்டால் நச்சு முறியும்.
     மருத்துவம் என்பது அறிவு சார்ந்த முன்னோரிடமிருந்து கூட வரலாம். இதற்குப் பயிற்சி போதும். படிப்புத் தேவையில்லை. அழுக்கு வேட்டி கட்டிய மருத்துவர்கள் அறிவாற்றலால் புகழப்படுகின்றனர்' என்றார் புண்ணியமூர்த்தி.
     அகத்தியர் மூலிகை மற்றும் உடலியக்க மைய மருத்துவர் தி. தட்சிணாமு்ர்த்தி பேசுகையில், 'தற்போது 50 சத மக்கள் மறைமுகமாக மரபு வழி மருத்துவத்தை எடுத்துக் கொள்கின்றனர்' என்றார் அவர்.
     புலத் தலைவர் ஆ. கார்த்திகேயன் வாழ்த்துரையாற்றினார்.
     முன்னதாக, துறைத் தலைவர் கு. அண்ணாதுரை வரவேற்றார். உதவிப் பதிவாளர் இரா. இந்து நன்றி கூறினார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai