Enable Javscript for better performance
 வழிப்பறி முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே தம்பதியிடம் நகைகளை பறிக்க முயன்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

    கபிஸ்தலம் காவல் சரகம் உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (45), விவசாயி. இவர் தனது மனைவியுடன் திருவையாறு அருகேயுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

    கணபதியக்ரஹாரம் அருகே வந்துபோது இரு சக்கரவாகனத்தில் இவர்களைத் தொடர்ந்து வந்த இருவர் வாகனத்தை வழிமறித்து சுதாகர் மனைவி அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றனராம்.  சுதாகர் மனைவி கூச்சலிடவே முயற்சியைக் கைவிட்டு இருவரும் தப்பினராம்.

     புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai