Enable Javscript for better performance
கரம்பயம் கல்லூரியில் சான்றிதழ்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் சான்றிதழ்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    கல்லூரித் தலைவர் சி. சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார்.

    விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தில் பங்கேற்ற மற்றும் கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் அளித்த மாணவிகளைப் பாராட்டி, அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கல்லூரி முதல்வர் பிறை. அறிவழகன், துணை முதல்வர் எஸ். ஷீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி. சுதா வரவேற்றார். பேராசிரியர் எம். இளையராணி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai