Enable Javscript for better performance
குடந்தை ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடந்தை ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா தொடக்கம்

    By கும்பகோணம்,  |   Published on : 12th April 2013 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் ராமசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீராமநவமி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தென்னக அயோத்தி எனப்படும் இத்திருக்கோவில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையானது. 10 நாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் ஸ்ரீராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி புதன்கிழமை (10-ம் தேதி) பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.

    வரும் 21-ம் தேதி முடிய நடைபெற உள்ள விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெற உள்ளது. வரும் 17-ம் தேதி மாலை சூர்ணாபிஷேகம், 18-ம் தேதி காலை வெண்ணெய்த்தாழி நடைபெற உள்ளது. 19-ம் தேதி காலை 7.30-க்கு தேரோட்டம், இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாசன், மற்றும் பட்டாச்சார்யர்கள், கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai