Enable Javscript for better performance
\\\"சுமைப் பணி தொழிலுக்குத் தனி வாரியம் தேவை\\\'- Dinamani

சுடச்சுட

    

    : சுமைப் பணி தொழிலுக்குத் தனி வாரியம் ஏற்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூரில் இந்த அமைப்பின் மாநிலக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    சில ஆயிரம் தொழிலாளர்கள் கொண்ட தொழிலுக்கு மாநில அரசு தனி வாரியம் அமைத்துள்ளது.

    ஆனால், மூன்றரை லட்சம் தொழிலாளர்கள் கொண்ட சுமைப் பணி தொழிலுக்குத் தனி வாரியம் உருவாக்கப்படவில்லை. சம்மேளனத்தின் சார்பில் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஆய்வு செய்வதாக மாநில அரசு கூறியது.

    ஆனால், இதுவரை அமலாகவில்லை. எனவே, சுமைப் பணி தொழிலுக்குத் தனி வாரியம் அமைக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் மக்களைப் பாதிக்கிற விலைவாசி உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

    பொது விநியோக முறையைப் பலப்படுத்த வேண்டும்.

    இந்திய தொழிலாளர் அமைப்புப் பரிந்துரைப்படி அரசு, தனியார் நிறுவனங்களில் சுமையின் அளவு 55 கிலோ வரைதான் இருக்க வேண்டும்.

    இதை மத்திய அரசும் ஏற்றுள்ள நிலையில், அரசுக் கிடங்குகளில் அமல்படுத்தப்படவில்லை. இதை அமல்படுத்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டாஸ்மாக் கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆண்டு போனசாக 20 சதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநிலத் தலைவர் எஸ். குணசேகரன் தலைமை வகித்தார்.

    மாநிலப் பொதுச் செயலர் ஆர். வெங்கடபதி, பொருளாளர் ஆர். அருள்குமார், துணைத் தலைவர்கள் ஜே. லாசர், ஏ. பிச்சைமுத்து செல்வராஜ், எஸ். அப்பாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai