Enable Javscript for better performance
தீக்காயமடைந்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தில் தீ விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.

    கும்பகோணம் மாதுளம்பேட்டை வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், கூலித் தொழிலாளி. இவருக்கும் ரஞ்சிதாவுக்கும் (20) கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வீட்டில் ரஞ்சிதா சமையல் செய்தபோது அருகிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டில் அடுப்பு மீது விழுந்ததில் ஏற்பட்ட தீயில்  தீக்காயமடைந்தார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.

    இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒராண்டே ஆவதால் வரதட்சிணையால் அவர் இறந்தாரா என ஆர்டிஓ சங்கரநாராயணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai