Enable Javscript for better performance
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    By தஞ்சாவூர்,  |   Published on : 12th April 2013 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

    வல்லத்தில் தஞ்சாவூர் ஒன்றிய திமுக பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும், கொடுங்கோலன் ராஜபட்ச மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் டெசோ அமைப்பை ஏற்படுத்தி உலகின் கவனத்தை திசை திருப்பிய திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு புதிய ரயில் இயக்கவும், தஞ்சை - பொன்மலை இடையே இருவழி ரயில் பாதை அமைக்கவும், தஞ்சை - அரியலூர் - பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்கவும் முயற்சி செய்த மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ் பழநிமாணிக்கத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ஒன்றிய அவைத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    மக்களவை உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சை நகரச் செயலர் எஸ்.என்.எம். உபயதுல்லா, வழக்குரைஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் து. செல்வம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai