Enable Javscript for better performance
மண்ணெண்ணெய்யை முறையாக வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை நகரில் குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் அளவை முழுமையாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    தஞ்சாவூரில் இந்தக் கட்சியின் நகரப் பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    தஞ்சை நகரில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவைக் கடுமையாகக் குறைத்து வழங்குவது கண்டிக்கத்தக்கது. எப்போதும்போல வழங்கிவரும் அளவின்படி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.  உடன் கழிப்பிட வசதி செய்து தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தஞ்சை நகரை தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நகரக் குழு உறுப்பினர் எம். முருகன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், நகரச் செயலர் எஸ்.எம். ராஜேந்திரன், துணைச் செயலர் ஆர். பக்கிரிசாமி, பொருளாளர் பி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai