Enable Javscript for better performance
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரண- Dinamani

சுடச்சுட

    

    மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரண

    By திருக்காட்டுப்பள்ளி  |   Published on : 12th April 2013 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள விஸ்ணம்பேட்டை ஸ்ரீ வேணுகோபால விலாஸா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கைப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியர் சுப்பு. ராமசாமி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ஜி. ராதாகிருஸ்ணன் தொடக்கிவைத்துப் பேசினார்.

    பேரணியில் தமிழக அரசு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், நவீன கற்றல் முறைகள், குழந்தைகளின் கல்வி அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

    ஊராட்சித் துணைத் தலைவர் எஸ். முத்துலெட்சுமி, ஆசிரியர்கள் வி. பொன்னம்பலம், ஜி. லெட்சுமி, எம். சுகுணா, ஜோ. கவிதா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    சிறந்த தொழிற்பணி

    விருதுகள் அளிப்புகும்பகோணம், ஏப். 11: கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த தொழிற்பணி விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    கும்பகோணம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத் தலைவர் எல். சந்திரபிரபு தலைமை வகித்தார். உதவி ஆளுநர் பாலாஜி முன்னிலை வகித்தார்.

    விழாவில் இப்பகுதியில் சேவை ஆற்றிவரும் மருத்துவர் ரவி, வழக்குரைஞர் கல்யாணசுந்தரம், கரும்பு ஜூஸ் வியாபாரி ஜெயராமன், சர்பத் கடை உரிமையாளர் பஷீர்அகமது, டீக்கடை உரிமையாளர் நடராஜன் ஆகியோரைப் பாராட்டி சிறந்த தொழிற்பணி விருதுகளை ரோட்டரி விருதுகள் வழங்கும் அமைப்பின் மாவட்டத் தலைவர் பொறியாளர் பிறையோன் அளித்துப் பாராட்டினார்.

    விழாவில் செயலர் மணிகண்ணன், நிர்வாகிகள் நெல்லை கணபதி, கல்யாணசுந்தரம், முருகன், சுவீட்ரவி, தீபீகாசெல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai