மாவட்ட மைய நூலகத்தில் ஏப். 18-ல் கட்டுரைப் போட்டி
By தஞ்சாவூர் | Published on : 12th April 2013 05:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் ஏப். 18-ம் தேதி கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் ப. மணிமேகலை தெரிவித்திருப்பது:
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் ஏப். 4, 5-களில் பொது நூலகத் துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வாசகர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம்
தோறும் உலக புத்தக தின விழாவை சிறப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் ஏப். 18-ம் தேதி காலை 10 மணிக்கு வாசகர்களுக்காக என்னை செதுக்கிய நூல்கள் என்ற தலைப்பில்
கட்டுரை போட்டி நடத்தப்படவுள்ளது.
ஒன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 8 பக்கங்ளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 500-ம், மூன்றாம் பரிசாக ரூ. 350-ம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.