Enable Javscript for better performance
அம்பேத்கர் திரைப்படம் இன்று திரையீடு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் உள்ள சரோஜ் அரங்கத்தில் சட்டமேதை அம்பேத்கர் திரைப்படம் சனிக்கிழமை திரையிடப்படவுள்ளது.

    தமிழ்க்கலை இலக்கியப் பேரவை, தமிழ் - வெளி அமைப்பு சார்பில் இந்தப் படம் திரையிடப்படவுள்ளது.

    இதுகுறித்து தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் கோ. நாகேந்திரன் தெரிவித்திருப்பது:

    என்.எப்.டி.சி. தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய இந்தப் படம் தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் உள்ள சரோஜ் அரங்கத்தில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க அனைவருக்கும் அனுமதி இலவசம்.

    இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் செ. சண்முகசுந்தரம் கருத்துரையாற்றுகிறார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai