சுமை வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்
By தஞ்சாவூர் | Published on : 13th April 2013 05:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை சுமை வேன் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 15 பேர் பலத்தக் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் அருகேயுள்ள வெட்டிக்காடு மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்தனர்.
பின்னர், அவர்களில் 15 பேர் சுமை வேன் மூலம் வெட்டிக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பட்டுக்கோட்டை புறவழிச்சாலை ரவுன்டானா பகுதியில் சென்ற இந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர். இவர்களில் உத்திராபதி (63), ஜோதி (45), கஸ்தூரி (25), லட்சுமிப்ரியா (2), பன்னீர்செல்வம் (50), பார்வதி (50), மணி (55), காசியம்மாள் (49), செல்வராணி (45), திலகவதி (40), சாமிநாதன் (55) ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.