Enable Javscript for better performance
தஞ்சையில் பெண்ணிடம் நகைப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் பூக்காரத் தெரு அருகேயுள்ள புது வஸ்தா தெருவைச் சேர்ந்தவர் முத்து சுப்பிரமணியனின் மனைவி சாவித்திரி (68). இவர் வெள்ளிக்கிழமை காலை அருகில் உள்ள கடையில் பால் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதனிடையே, வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் இவரது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai