தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு விருது:முதல்வருக்கு நன்றி
By தஞ்சாவூர் | Published on : 13th April 2013 05:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு விருது வழங்கி கெüரவித்த தமிழக முதல்வருக்கு திருவையாறு திருவள்ளுவர் தமிழ்ப் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரவையின் தலைவர் ப. குருசாமிநாதன் தெரிவித்திருப்பது:
தில்லி தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுடன் தில்லி வாழ்
தமிழர்களின் மேம்பாட்டுக்காக நற்பணி ஆற்றி வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை அழைத்து இரு நாள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது.
இந்தச் சங்கத்தின் செயலராக இருப்பவர் திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரத்தைச் சேர்ந்த இரா. முகுந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சங்கத்துக்கு தமிழக அரசு தமிழ்த்தாய் விருது வழங்கி கெüரவிப்பதற்குக் காரணமான தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.