மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By தஞ்சாவூர், | Published on : 13th April 2013 05:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மீண்டும் பணி வழங்கக் கோரி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்றக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்கள் நலப் பணியாளர்களை 2011 ஆம் ஆண்டு நவ. 8-ம் தேதி தமிழக அரசு மூன்றாவது முறையாகப் பணி நீக்கம் செய்ததையும், உச்ச நீதிமன்ற ஆணையை மதித்து மீண்டும் பணி வழங்காமல் அலட்சியப்படுத்தியதையும், அதற்காக நடத்தப்பட்ட பல கட்டப் போராட்டங்களைப் பொருள்படுத்தாமல் இருப்பதையும் கண்டித்தும்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி மீண்டும் பணி வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் தன. மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கு. வாகலிங்கம், செயலர் கோ. பெரியசாமி, பொருளாளர் க. கரும்பாயிரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.